எல்லாருக்குமே ஒரு ஆசை இருக்கும் - 'வாழ்க்கையில எப்படியாவது முன்னேறணும்னு'.
அந்த ஆசை எனக்கும் இருந்துச்சு.
ஆனா என்னோட தமிழ்வழிக்கல்வி என் கனவுகளுக்கு முட்டுக்கட்டையா இருக்குமோன்னு பயமும் இருந்துச்சு.
ஏன்னா, என்னை சுத்தி இருந்தவங்க யாருமே சிறப்பான வேலையிலயோ, கை நிறைய சம்பளம் வாங்கவோ இல்ல! காரணம், அவங்க படிச்சது தமிழ் மீடியம், அவங்களால நல்லா இங்லிஷ் பேச முடியல.
என்னுடைய career சிறப்பா இருக்கணும்னா கண்டிப்பா எனக்கு நல்ல English Fluency இருக்கணும்ன்ற தெளிவு எனக்கு பள்ளிப்பருவத்துலயே கெடச்சது.
ஆனா எப்படி என் இங்லிஷை முன்னேத்துறதுனு தெரியாம இருந்தேன். எவ்வளவோ ட்ரை பண்ணேன். ஸ்கூல் சொல்லிக்கொடுத்த எல்லா வழிமுறைகளையும் உபயோகிச்சு பாத்தேன்.
இதனால எனக்கு இங்லிஷ் பாடத்துல நல்லா மார்க் கெடச்சுதே தவிர, என் English Fluency முன்னேறல.
தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய தமிழ் பேச்சுப்போட்டிகள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்குனதுக்கும், என்னோட மற்ற பாடங்கள ஈஸியா புரிஞ்சு படிச்சு நல்ல மார்க் வாங்குனதுக்கும் அடிப்படை என்னோட தமிழ்வழிக்கல்வி தான்.
ஸோ, இங்க பிரச்சனை தமிழ்வழிக்கல்வி இல்ல. சரியான முறையில இங்லிஷ் ப்ராக்டிஸ் செய்யாதது தான். இந்த புரிதல் எனக்குள்ள வந்ததும், என் வாழ்க்கை மாறுச்சு.
பள்ளிப்படிப்பு முடிஞ்சு, காலேஜ் சேரும்போது, எப்படியாவது காலேஜ் முடியிற 3வது வருஷத்துக்குள்ள என்னோட English Fluencyய சூப்பராக்கிடணும்னு முடிவு பண்ணி, அதுக்கான இலக்கு நிர்ணயிச்சேன்.
இந்த இலக்கை நிறைவேத்தி காட்ட school system சொல்லிக்கொடுத்த முறைகள follow பண்றது கண்டிப்பா டைம் வேஸ்ட்னு புரிஞ்சிக்கிட்டேன்.
என் கூட இங்லிஷ் பேசி பழக யாரும் இல்ல.
School system சொல்லிக்கொடுத்த முறைகள் examination கண்ணோட்டத்துல, answer-paper திருத்த மட்டும் ஈஸியா இருக்குற வகையில இருந்ததால, எனக்கு சுத்தமா ஒர்க்கவுட் ஆகல.
சரி விடு, எனக்கான இங்லிஷ் கத்துக்குற முறைகள நானே உருவாக்கிக்க வேண்டியதுதான்ற முனைப்போடவும், தன்னம்பிக்கையோடவும் நிறைய டெக்னிக்குகள கண்டுபிடுச்சு, உருவாக்கி ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சேன்.
என்னோட டெக்னிக்குகளின் ஆரம்பப்புள்ளியே நான் எப்படி தமிழ் கத்துக்கிட்டேன்னு எனக்குள்ள நான் கேட்ட கேள்விதான்.
இந்த கேள்விக்கு, என் மூளைக்குள்ள போய் விடை தேட தேட, நூத்துக்கணக்கான டெக்னிக்குகள் எனக்குள்ள உருவாக ஆரம்பிச்சுது.
இதுல பல டெக்னிக்குகள் அதிக பலன் தரல. ஆனா சில டெக்னிக்குகள் 10,000 மடங்கு அதிகமான பலன் தந்துச்சு. அந்த 10,000X பலன் தந்த டெக்னிக்குகள நான் அதிகமா, அதி தீவிரமா, தினமும் ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சேன்.
காலேஜ் 2-வது வருஷம் படிக்கும்போதே, என்னோட இங்லிஷ் Fluency-ல மிக அதிக மாற்றங்களும், முன்னேற்றங்களும் பார்க்க ஆரம்பிச்சேன்.
ஒரு HR Placement & Training institute-ல பார்ட்-டைம் வேலைக்கான இன்டெர்வியூக்கு chance வந்தது.
பயத்தோட தான் இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணேன்.
ஆனா எனக்குள்ள ஒரு confidence - நான் என் இங்லிஷ் முன்னேற்றத்துல நெறைய உழைச்சிருக்கேன்னு, என்னால கண்டிப்பா ஜெயிக்க முடியும்னு...
கிட்டத்தட்ட 30 நிமிஷம் அந்த இன்டெர்வியூ போச்சு.
இன்டெர்வியூ முழுக்கவே இங்லிஷ்ல தான் இருந்துச்சு.
மனசுக்குள்ள பயம் இருந்தாலும், என் தினசரி இங்லிஷ் ப்ராக்டிஸ் எனக்கு கைகொடுத்துச்சு.
என்னோட முதல் Offer லெட்டர் - 3.30pm முதல் 7.30pm பகுதி நேர வேலை, 3,500 ரூபாய் சம்பளம். ஒரு காலேஜ் ஸ்டூடெண்ட்-ஆ அந்த இன்டெர்வியூல ஜெயிச்சு Offer லெட்டரோட வெளிய வரும்போது, அது வேற லெவல் feeling...
இன்னைக்கு நான் ஒரு அகாடமி owner. ஒரு business woman. கடவுள் கருணையில bank-balance பாஸிட்டிவ்வா இருக்கு. ஆனா அது எல்லாத்துக்குமே பிள்ளையார் சுழி என்னோட 3,500 ரூபாய் முதல் சம்பளம்.
இந்த முதல் சம்பளம் கிடைக்க மட்டுமில்ல, எனக்கு ஒரு நல்ல career உருவாகவும் அடிப்படை எது தெரியுமா?
என்னோட அர்ப்பணிப்பு - இங்கிலிஷ் முன்னேற்றத்திற்கு.
என்னோட இங்லிஷ் கற்கும் technique-களும், model-களும், strategy-களும் நான் எனக்காக உருவாக்கியவை.
நான் எனக்காக உருவாக்கி, பயனடைஞ்ச இந்த இங்லிஷ் கற்கும் technique-களும், model-களும், strategy-களும் இப்போ நீங்களும் பெறும் வாய்ப்பு இருக்கு - English Mastery மற்றும் Grammar Mastery Programகள் வழியா.
என்னோட வழியில இங்லிஷ் கத்துக்க ஆரம்பிங்க.
என்னோட இங்லிஷ் கத்துக்குற methodology-கள அர்ப்பணிப்போடு ப்ராக்டிஸ் பண்ணுங்க.
உங்க English Fluency முன்னேறும்.
உங்க Career கனவுகள் எல்லாமே கண்டிப்பா நிறைவேறும்.
உங்க Successக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என்னோட இங்லிஷ் கத்துக்கிற பாதையில, பல ஏற்றத்தாழ்வுகள் இருந்துச்சு. பல அவமானங்களையும், பயங்களையும் கடந்து தான் நான் இந்த நிலைக்கு வந்திருக்கேன்.
அந்த அனுபங்களை THE HINDU நாளிதழில் என்னை கண்ட பேட்டியில ஷேர் செய்திருக்கிறேன்.
தமிழ் மீடியம் படிச்சாலும் இங்கிலிஷ் பேசலாம் LJfamily.